சமீபத்தில் எச்.ராஜா வெளியிட்ட அறிக்கையில், திருமாவளவனையும், ஜவாஹிருல்லாவையும் “தேச விரோதிகள்” என்று விமர்சித்திருந்தார். உண்மையான தேசபக்தர்கள் அவர்களைப் போன்ற நபர்களுக்கு எதிராக நிற்க வேண்டும் என்று கூறிய அவர், அமரன் திரைப்படத்தை விமர்சிக்கிறோம் என்ற போர்வையில் பிரிவினைவாத கருத்துக்களை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார். இவர்களை அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் திராவிடக் கட்சிகளை சாதி மற்றும் மொழி வெறியர்கள் என்றும் ராஜா கண்டித்துள்ளார்.