திருமண மேடையிலேயே மயங்கி விழுந்த மணமகள்… மருத்துவர் கூறிய அதிர்ச்சி செய்தி… நடந்தது என்ன…??

திருமண மேடையில் மயங்கி விழுந்த மணமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள மஹிலாபாத் பாத்வனா  கிராமத்தை சேர்ந்த ராஜ்ப்பால் சர்மா என்பவரின் மகள் ஷிவாங்கி சர்மா (21). இவருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். இந்நிலையில்  திருமணத்தன்று  புகைப்படம் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்த போது திடீரென ஷிவாங்கி சர்மா மேடையில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் திருமணத்திற்கு வந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின் உறவினர்கள் மணப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மணப்பெண்ணுக்கு இறுதி சடங்கு நடத்தியுள்ளனர். ஆனால் இதுகுறித்து  அறிந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மணப்பெண்ணின் உறவினர்கள் பேசும்போது, ஷிவாங்கி சர்மா சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தான் இருந்தார். பின்னர் அது குணமான நிலையில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற போது மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.