“திருமண பரிசாக வந்த அழகிய பொம்மை”….. திறந்து பார்த்த மணமக்களுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

குஜராத்தில் நடைபெற்ற திருமண விழாவில் திருமணப் பரிசாக வந்த பொம்மையை ரீசார்ஜ் செய்த போது அது வெடித்து சிதறியதில் மணமகனுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள  மின்தாபரி கிராமத்தை சேர்ந்த லதேஷ் என்பவருக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த வான்ஸ்தா என்பவருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பல பரிசுகளை வழங்கினார்கள் . திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு மணமகன், உறவினர்கள் தங்கள் வீட்டில் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பரிசுப்பொருட்களை திறந்து பார்த்தனர். அந்த பார்சலில் அழகிய பொம்மை ஒன்று இருந்தது. அதை ரீசார்ஜ் செய்ய முயன்றபோது அந்த பொம்மை திடீரென்று வெடித்து சிதறியது.

இதனால் மணமகனின் கைகள், தலை மற்றும் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டது, அவரது வலது மணிக்கட்டு கூட கையிலிருந்து துண்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் மணமகளின் தலை மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டது. இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடித்து சிதறிய பரிசானது மணப்பெண்ணின் மூத்த சகோதரியின் முன்னால் காதலனால் வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அந்த பொம்மையை கோயம்பாவில் வசிக்கும் ராஜு படேல் பரிசாக வழங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். மணமகளின் மூத்த சகோதரியுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும், அவர்கள் உறவு முறையில் வாழ்ந்து வந்தனர். ஆனால் அவர்கள் சிறிது காலத்திற்கு முன்பு பிரிந்தனர் என்று மணமகளின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *