தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. பின்பு உடல் எடையை ஏற்றியதால் வாய்ப்பில்லாமல் இருந்த ஹன்சிகா கடினமான உடற்பயிற்சி செய்து ஒல்லியாக மாறிய நிலையில் பட வாய்ப்புகள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் சோஹேல் கத்துரியா என்பவரை ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் 25 கோடி ஆசைப்பட்டு நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் திருமண வீடியோவை விற்றது போல நடிகை ஹன்சிகாவும் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தில் திருமண வைபோக நிகழ்வுகள் லவ் ஹாடி டிராமா என்ற பெயரில் விரைவில் வெளியாக உள்ளது. திருமணம் முடிந்த இத்தனை மாதங்கள் கழித்தும் நயன்தாராவின் திருமண வீடியோ இன்னும் வெளியாகாத நிலையில் ஹன்சிகா தற்போது நயன்தாராவை முந்திவிட்டார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க