திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு மிரட்டல்….. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருமணம் நிச்சயக்கப்பட்ட இளம்பெண்ணை மிரட்டிய குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நாகப்பட்டினத்தை சேர்ந்த 25 வயதுடைய பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் இளம்பெண் கூறியதாவது, நான் மடிப்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்தேன். அப்போது எக்ஸ்ரே பிரிவில் வேலை பார்த்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய்(24) என்பவர் எனக்கு அறிமுகமானார். நாங்கள் இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். பின்னர் ஆசை வார்த்தைகள் கூறி விஜய் பலமுறை என்னிடம் தவறாக நடந்து கொண்டார். இந்நிலையில் பல பெண்களுடன் விஜய்க்கு தொடர்பு இருந்ததை அறிந்தவுடன் நான் அவருடன் பேசுவதை தவிர்த்து விட்டேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒருவருடன் எனக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அடுத்து விஜய் 2 லட்ச ரூபாய் பணம் கேட்டு என்னை மிரட்டுகிறார். அந்த பணத்தை கொடுக்கவில்லை என்றால் என்னுடன் பழகிய புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுகிறார். எனவே விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார் விஜயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *