திருமணம் செய்வதாக கூறி எல்லாத்தையும் பண்ணிட்டு… இப்போ வேண்டாம்ன்னு சொன்ன எப்படி?

கடலூர் அருகே இளம் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழகிவிட்டு திருமணத்துக்கு மறுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுவரன். இவர் அப்பகுதியில் உள்ள இளம் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நீட நாட்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இளைஞர் ரகுவரனிடம் கூறிய போது அவர் மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் இளைஞர் ரகுவரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.