உத்திரபிரதேசம் மாநிலத்தின் ராஜன் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 24 வயது இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே ராஜனுக்கும் இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இளம் பெண் ராஜனை திருமணம் செய்து  வைக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த வாலிபர் கோபத்தில் சம்பவ நாளில் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த இளம் பெண்ணை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அந்த இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இளம் பெண் இறந்து விட்டதாக நினைத்து ராஜன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.