திருமணமாகி 8 மாதம்தான் ஆகுது… வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை பகுதியில் சக்திவேல் (24) என்பவர் வசித்து வந்தார். இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். இதையடுத்து இவர் சென்னையில் ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பரவலை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் அம்பாத்துரையில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் வீட்டிலிருந்தே வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் எட்டு மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று இவர் கால்களை கழுவுவதற்காக அப்பகுதியில் உள்ள தரைமட்ட கிணற்றிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார்.

அதனை கண்ட அப்பகுதி மக்கள் சக்திவேலை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல்லில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சக்திவேலின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.