திருமணமாகி ஒரு வருஷத்தில் பிரிவா!! மகாலட்சுமியுடன் ஏற்பட்ட சண்டை பற்றி கூறிய ரவீந்தர்..!!!

தயாரிப்பாளர் ரவீந்தர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால் பல விமர்சனங்களுக்கு ஆளாகினர். இதனிடையே தனியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ரவீந்தர் வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே எனக் குறிப்பிட்டிருந்தார். ரவீந்தரின் இந்த பதிவால் இருவருக்கும் சண்டையா என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மகாலட்சுமி தனது தாயுடன் பிரச்சனை என்றால் கூட சகித்துக் கொள்வாள். அவளுடைய தோழிகள் தன்னுடன் பேசினால் கூட கோபப்படுவார் என்று ரவீந்தர் குறிப்பிட்டார். அந்த ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் சண்டையே தவிர மற்ற சண்டைகள் அப்படி வந்து இப்படி போய்விடும் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.