திருமணத்தை மறைத்து காதல்…. ரூ.30 லட்சம் அபேஸ் செய்த நடிகை….. பெரும் பரபரப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ்.யூடியூப் சேனல் நடத்தி வரும் அவரிடம் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் திவ்யபாரதி என்பவர் அறிமுகமாகியுள்ளார். தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜா வீட்டிற்கு சென்று தங்கி குடும்ப ரீதியாக நட்பாக பழகியுள்ளனர். திவ்யபாரதி தன்னுடன் இரண்டு பெண் குழந்தைகளை அழைத்து வந்துள்ளார். அந்த குழந்தைகளை தனது அக்காவின் குழந்தைகள் என்றும் அக்கா கணவர் ஓடி விட்டதால் தான் வளர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். அதன் பிறகு பகலவன் ராஜாவின் தாயார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். ஆனால் திவ்யபாரதி திருமணம் செய்யாமல் காலம் கடத்தி வந்தார். தனியாக வீடு எடுத்து தங்க வேண்டும் என கூறியதால் திண்டுக்கல்லில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திவ்யபாரதி தங்கி உள்ளார். வீட்டு செலவுக்கு என மாதம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பகலவன் கொடுத்து வந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் மருத்துவ செலவுக்காக ஒன்பது லட்சம் ரூபாய் பணமும் ஆசை வார்த்தைகளை கூறி பத்து பவுன் தங்க நகைகளையும் வாங்கியுள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கடத்தி வந்த திவ்யபாரதியை பற்றி சந்தேகமடைந்த பகலவன் ராஜா விசாரித்துள்ளார். அப்போது திவ்யபாரதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. இதனை அறிந்த பகலவன் தன்னிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.