திருமணத்தில் விஷ்ணு விஷாலுடன் நடனமாடிய ஜுவாலா கட்டா… வைரலாகும் புகைப்படம்…!!!

சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

தமிழ் திரையுலகில் நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார் . தற்போது நடிகர் விஷ்ணு விஷால் ஜெகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார்.

விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா

கொரோனா காலம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா இருவரும் தங்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜுவாலா கட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்தின் போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடனமாடியதாக குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *