
குவாலியர் பகுதியில் போலீஸ் கண்முன்னே தன் மகளை சுட்டுக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அந்த பகுதியில் மகேஷ் குர்ஜார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனு என்ற மகள் இருக்கிறார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. ஆனால் தனு விக்கி என்பவரை காதலிப்பதாகவும் தன்னுடைய குடும்பத்தினர் மிரட்டி திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும் வீடியோ வெளியிட்டார்.
இது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் பஞ்சாயத்தார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆத்திரமடைந்த மகேஷ் தன்னுடைய மகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். மேலும் போலீஸ் கண்முன்னே தன் மகளை அவர் சுட்டுக்கொலை செய்த நிலையில் காவல்துறையினர் மகேஷை கைது செய்துள்ளனர். திருமணத்திற்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.