தமிழ் சினிமாவில் பிகில் மற்றும் விருமன் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. இவரின் எதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது தந்தை ரோபோ சங்கரை போலவே இவருக்கும் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திரஜா மட்டுமல்லாமல் இவரின் குடும்பத்தினரும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திரஜாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார். அதே சமயம் இவர் தொடர்பான செய்திகள் அடிக்கடி வைரலாகி வரும் நிலையில் தற்போது தன்னுடைய உடம்பை வில் போல வளைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இந்திரஜா பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் திருமணத்தை வைத்துக் கொண்டே இதெல்லாம் தேவையா என்று அவரை கலாய்த்து வருகிறார்கள்.