திருப்பதி பக்தர்களே…. “பிப்ரவரி மாத தரிசன டிக்கெட்”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதியில் பிப்ரவரி மாத தரிசன டிக்கெட் நாளை ( ஜனவரி.28 ) வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட் நாளை ( ஜனவரி.28 ) வெளியிடப்படுகிறது. தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு டிக்கெட் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் என்ற வீதத்தில் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது. அதேபோல் இலவச தரிசனத்திற்காக நாள்தோறும் ரூ.10,000 டிக்கெட்டுகள் 29-ஆம் தேதி காலை 9 மணி முதல் துவங்குகிறது.

இந்த தகவலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அனைவரும் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளத்தில் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *