திருப்பதி பக்தர்களுக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் சுவாமியை தரிசனம் செய்வதற்கான அங்கப்பிரதட்சணம் டோக்கனானது  நாளை (நவ..25) தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்படுகிறது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப் பிரதட்சண டோக்கன் நாளை (நவ..25) காலை 10 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

ஆகவே இதனை பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன் பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply