திருப்பதி கோவில் 2 நாட்கள் மூடப்படும்…. பக்தர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்த வருடம் அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் எட்டாம் தேதி சந்திர கிரகணம் என்பதால் ஏழுமலையான் கோவிலில் கதவுகள் இந்த இரண்டு நாட்களும் 12 மணி நேரம் மூடப்பட்டிருக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 25ஆம் தேதி காலை 8.11மணிக்கு மூடப்பட்டு இரவு ஏழு முப்பது மணிக்கு ஆகாம விதிகளின்படி மீண்டும் கதவுகள் திறக்கப்படும். அதனைப் போலவே நவம்பர் எட்டாம் தேதி காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.

இந்த இரண்டு நாட்களிலும் விஐபி தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை காண விஐபி தரிசனம்,300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் கல்யாண உற்சவம் உள்ளிட்ட அனைத்து ஆர்சித சேவைகளும் ரத்து செய்யப்படும். மேலும் இந்த இரண்டு நாட்களிலும் வைகுண்டம் காம்பளக்ஸ் வழியாக கோயில் கதவுகள் மீண்டும் திறந்த பிறகு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.