திருப்பதி கோயிலுக்கு செல்வோர் கவனத்திற்கு…. இன்று டிக்கெட் வெளியீடு…. ஆனா இது கட்டாயம்…..!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான தரிசனத்திற்கு மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், நோயால் அவதிப்பட்டோருக்கான டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், கட்டாயம் இதற்கான மருத்துவ சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply