திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு…. தரிசன டிக்கெட் இன்று வெளியீடு…. உடனே முந்துங்க….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சன சேவைக்கான தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்ற தேவஸ்தானம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 20ஆம் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற உள்ளது.அதற்காக நான்கு மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டு குறைந்த அளவில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. அதற்கான டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானத்தின் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் என்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.