திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போது புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணி நேரம் மூடப்பட உள்ளது.

அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை நிலவும் சந்திர கிரகணத்தால் அக்டோபர் 28ஆம் தேதி இரவு 7.05 மணிக்கு கோவில் மூடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும். அக்டோபர் 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.