திருப்பதியில் பக்தர்களுக்கு….. “இந்த ஒருநாள் தரிசனம் ரத்து”….. வெளியான முக்கிய தகவல்….!!!!

திருப்பதியில் வரும் 20-ம் தேதி மட்டும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. அந்த தினத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது. விழாவின் போது மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அரசு பட்டு வஸ்திரங்கள் அளிக்கப்பட்ட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பிரம்மோற்சவ விழா நாட்களில் கோயிலின் மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதிக்க படாத நிலையில் இந்த வருடம் பக்தர்களுக்கு அனுமதி உள்ளது.

அதனால் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதால், அதற்கு முன்னதாக கோவிலை சுத்தப்படுத்த வேண்டும் என்பதற்காக வரும் இருபதாம் தேதி காலை 6:00 மணி முதல் 11 மணி வரை கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு மூலிகை நீர் தெளிக்கப்படும். இதனால் அந்த ஐந்து மணி நேரம் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று திருமலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பதிக்கு செல்வதாக இருந்தால் அதற்கேற்றபடி திட்டமிட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.