திருப்தி இல்லை என்றால்….. ஆசிரியர்கள் உடனே டிஸ்மிஸ்….. அரசு தடாலடி அறிவிப்பு….!!!!

தற்காலிக ஆசிரியர்களின் நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சற்றுமுன் வெளியிட்டு இருந்தார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,300 பணியிடங்களில் தற்காலியாக ஆசிரியர்களை பணிநியமானம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வி ஆணையர் கடந்த வாரம் வெளியிட்டு இருந்தார். அதில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என்று மூன்று வகையான ஆசிரியர்கள் நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பணியமனத்தை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாக குழு மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அடிப்படையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி கல்வி தகுதி அடிப்படையில் சரியான முறையில் இந்த பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளிலும் காலியாக இருக்கக்கூடிய விவரங்கள் எல்லாம் அறிவிப்பு பலகையில் இன்று வெளியிட வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் வருகிற 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் . அதில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தி அளிக்கவில்லை என்றால், அவர்களை உடனே பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் வகுப்பறையில் பாடம் நடத்த வைத்து அவர்களின் திறன்களை பரிசோதனை செய்தே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *