திருநங்கையிடம் ஐடியா கேட்ட முதல்வர் ஸ்டாலின்…. எதற்கு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் நடைபெற்ற அரசு விழாவில் சுய உதவி குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் பல்வேறு பெண்கள் திருநங்கைகள் தங்கள் கருத்துக்களையும், கோரிக்கைகளையும், முன் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரியை சேர்ந்த வசந்தி என்ற திருநங்கையுடன் முதல்வர் ஸ்டாலின் உரையாடினார். அப்போது வசந்தி கூறியதாவது, நான் பிபிஎம் படித்துவிட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தேன்.

நான் திருநங்கையாக மாறி தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வருகிறேன். அப்போது, மக்கள் என்னை ஒன்பது, அரவாணி என்று கேலிக்கையாக பேசுவார்கள். அந்த நேரத்தில் கலைஞர் ஐயா அவர்கள் எங்களுக்கு திருநங்கை என்று பெயர் சூட்டி எங்களை கௌரவப்படுத்தி பெருமைப்படுத்தினார். அந்த சமயத்தில், எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கலைஞர் ஐயா, ஆட்சியில் எங்களையும் திருநங்கை என்று பெயர் சூட்டி, இந்த சமுதாயத்தில் பெருமைப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுக்கு வீடு இல்லாத நிலையில் அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி அவர்கள் 25 வீடு கட்டிக் கொடுத்தார்கள். தற்போது அந்த வீட்டில் நாங்கள் கௌரவமாக வாழ்ந்து வருகிறோம். இத்தனை காலமாக எங்களுடைய வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பொழுது, வீட்டில் இருந்தோம். மேலும் கடை கடையாகச் சென்று கடன் கேட்போம். அப்போதுதான் நாங்கள் மகளிர் சுய உதவி குழுவிடம் ஒரு உதவி கேட்டோம். எங்களையும் உங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று. அதற்கு மகளிர் திட்டம் மூலம் எங்களையும் சேர்க்க கூறினோம்.

சிவசக்தி திருநங்கை குழுவாக ஆரம்பித்து நாங்கள் இன்றைக்கு தருமபுரி மாவட்டத்தில் எல்லா ஊர்களிலும் திருநங்கைகள் ஒரு குழுவில் இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். இதைத்தொடர்ந்து, தற்போது உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் எங்களுக்கு 6 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கினார்கள். அந்த கடனை வைத்து சிறு தொழில் ஆரம்பித்து கௌரவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்களுடைய புண்ணியத்தில் நாங்கள் என்னும் பெருவாழ்வு வாழ வேண்டும். தற்போது சிறு தொழிலாக பால், வியாபாரம் துணி, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வியாபாரங்களை செய்து வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

இதைக்கேட்ட முதல்வர் ஸ்டாலின் நீங்கள் பெரிய அளவில் போராடி வெற்றி மங்கையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுடைய அனுபவத்தில் திருநங்கைகளுடைய நல்வாழ்விற்கு புதிதாக இந்த அரசுக்கு ஆலோசனை சொல்ல விரும்புகிறீர்களா என்று முதல்வர் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு பதில் அளித்த வசந்தி, ஆமாங்க ஐயா இப்பொழுது படித்த திருநங்கைகள் அதிகம் இருக்கிறார்கள். மகளிருக்கு பேருந்து வசதி செய்து கொடுத்தது போல, திருநங்கைகளுக்கும் செய்து கொடுத்து இருக்கிறீர்கள்.

அதேபோன்று மகளிர் திட்டத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பது போல திருநங்கைகளுக்கும் வேலை வாய்ப்பு கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நாங்களும் வாழ்க்கையில் முன்னேறுவோம். தற்போது உள்ள திருநங்கைகளுக்கும் அடுத்து வருகிற திருநங்கைகளுக்கும் நாங்கள் வழிகாட்டியாக இருப்போம் என்று நாங்கள் நினைக்கிறோம். இதுவரை நீங்கள் செய்து கொடுத்த வாய்ப்புக்கு மிக்க நன்றி மேலும் மிகவும் சந்தோசமாக இருக்கிறது ஐயா என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *