திருச்செந்தூர் முருகன் கோவிலில் 2023 ஆம் வருட தைப்பூச திருவிழாவானது இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தைப்பூச திருநாள் அன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளார்கள். இந்த நிலையில் காவல்துறை பக்தர்களுக்கு சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதாவது சாலையில் பக்தர்கள் நடந்து வரும் பொழுது எப்பொழுதும் வலது புறமாக நடந்து வரவேண்டும்.

கோயிலுக்குள் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்கள் அச்சிடப்பட்ட உடைகளை அணிந்துவிடக்கூடாது. சர்பக்காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த உத்தரவுகளை மீறினால் அந்த நபர்கள் மீது சட்டப் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு 600 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.