திருச்செந்தூரில் பக்தர்களை கவர்ந்த அறிவிப்பு பலகை…. நீங்களே கொஞ்சம் பாருங்க….!!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை ஒன்று பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த பலகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு படி கடந்த 9ஆம் தேதி முதல் 250 மற்றும் 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்த கோவிலில் முக்கிய பிரமுகர்களுக்கு விஐபி பாஸ் வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.