திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… 2000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற KDMK வேட்பாளர்…!!

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஈ.ஆர்.ஈஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,30,316 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 78.71% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஈ.ஆர்.ஈஸ்வரன் 81,688 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார்.

மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன். சரஸ்வதி 78,826 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட பொ.நடராசன் 13,967 வாக்குகள் பெற்றுள்ளார். இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஈ.ஆர்.ஈஸ்வரன் தலா 2,862 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் ஊரடங்கு விதிமுறைகளுடன் பாதுக்காப்பாக தனது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *