திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சியாக நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட மூன்று இளம் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த இளம் பெண்கள் மூன்று பேரும் டைட்டான ஜீன்ஸ், பனியன் அணிந்து உடலை வளைத்து நெளித்து பாடல் ஒன்றுக்கு கவர்ச்சிகரமாக நடனமாடியுள்ளனர். இந்த காட்சிகளை இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்ட நிலையில் இது வைரலானது.

இதை பார்த்த நெட்டிசன்கள் இதை ரசித்தாலும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் படம் எடுக்க முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும். எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் இப்படி கவர்ச்சியாக நடனத்தை எடுத்தது குற்றம். இதனால் ரயில் நிலையத்தில் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டது எப்படி என்று பலரும் ரயில்வேக்கு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.