திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி சார்பாக பராமரிக்கப்பட்ட வரும் குடிநீர் தொட்டிகள் மூலமாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த குழாய்களில் ஏற்படும் பழுது காரணமாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்படும். அதன்படி திருச்சி மாநகராட்சியில் பிப்ரவரி 15ஆம் தேதி இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். நீர்த்தேக்க கிணறு பகுதியில் உள்ள மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் பொதுமக்கள் முன்னேறுபாடுகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.