திமுக வன்முறை கட்சி என்பது நிரூபணமாகிவிட்டது…. செல்லூர் ராஜு சாடல்…!!!

மதுரை பரவை பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிகழ்ச்சியின் கீழ் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐடி ரெய்டு மிக தாமதமாக நடைபெறுகிறது.இது முன்கூட்டியே நடந்திருந்தால் கள்ளச்சாராயம் மரணம் மற்றும் போலி மதுவால் ஏற்பட்ட மரணம் உள்ளிட்டவை நடந்து இருக்காது. சோதனைக்கு வந்த ஐடி அதிகாரிகளை தாக்குவதன் மூலம் திமுக வன்முறை கட்சி என்பதை காட்டுகிறது. திமுக ஒரு விளம்பர அரசு, செயல்படுகிற அரசு அல்ல என்று விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Reply