திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் ஆர்.என் ரவி தரப்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். ஆளுநரை அவதூறாக விமர்சித்தது குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஏற்கனவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநரை அவதூறாக விமர்சித்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.