திமுக – பாஜக இடையே வாக்குவாதம்… தள்ளுமுள்ளு… பெரும் பரபரப்பு…!!!

அரவக்குறிச்சி தொகுதி பல்லபட்டி வாக்குச்சாவடியின் திமுக மற்றும் பாஜக இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது. அதன்படி வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதி பல்லபட்டி வாக்குச்சாவடியில் திமுக மற்றும் பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியிலிருந்த தன்னார்வலர்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாஜகவும், இஸ்லாமியர் வாக்களிப்பதை குறைப்பதற்காக பாஜக பிரச்சனை செய்வதாக திமுகவும் குற்றம் சாட்டியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.