சேலம் மாவட்டத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி பரப்பரை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இளைஞர் ஒருவர் வயல்வெளியில் சுற்று திரிந்த நல்ல பாம்பு ஒன்றை கழுத்தில் போட்டுக்கொண்டு அந்தப் பகுதியை சுற்றியபடி திரிந்துள்ளார். இதனைக் கண்ட பகுதி மக்களும் தொண்டர்களும் அச்சம் அடைந்தனர். பிறகு அப்பகுதியில் காவலுக்கு இருந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.