தி.மு.க வார்டு கவுன்சிலரை அமைச்சர் கே.என்.நேரு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூபாய் 3.46 கோடி மதிப்பில் அமைக்கப்பட இருக்கும் வாரச்சந்தை மேம்பாட்டுப் பணிகளுக்கு அமைச்சர் கே.என் நேரு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகு பாறைப் பகுதியில் ரூபாய். 95 லட்சம் மதிப்பிலான புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அதன்பின் அங்கு வந்த பெண்களுக்கு குடங்களை பரிசாக வழங்கினார். அப்போது குடங்களை ஒவ்வொன்றாக எடுத்து அமைச்சரிடம் கொடுத்துக் கொண்டிருந்த திருச்சி வார்டு கவுன்சிலரின் தலையில் அமைச்சர் கே.என்.நேரு ஓங்கி அடித்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sad disrespect for cadres pic.twitter.com/sCnVCaXOwo
— Gayathri Raguramm – Say No To Drugs & DMK (@Gayatri_Raguram) January 9, 2023