மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய சசிகலா புஷ்பா, ஒரு மதத்தைச் சார்ந்த பெண்மணி எங்கள் இந்து குழந்தையை பார்த்து டாய்லெட் கழுவு, பெருக்கு, துடை என்று படிக்கவேண்டிய வயதில் கொடுமைப்படுத்தினாரே… அதை பார்த்து கொண்டிருக்கும் சொல்கிறாயே தமிழக அரசே… இதனால் இன்றைக்கு எங்களுக்கெல்லாம் கருப்பு தினம்.
டாய்லெட்டு கழுவு, வேலையை செய், மதம் மாற மாட்டாயா ? என்று மெண்டல் டார்ச்சர் கொடுத்து அந்த பிள்ளையை கொன்றதற்கு ஒரு அமைச்சர் எதுவுமே நடக்கவில்லை என்று சொல்கிறார் என்று சொன்னால் என் அன்பு சகோதர அண்ணாமலை பார்த்துக் கொண்டிருப்பான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா.திமுக ஆட்சி 5 வருடம் விட்டு வைக்க மாட்டார்.
எனவே திமுக அரசாங்கத்திற்கு உண்மையிலேயே இது எச்சரிக்கை. இப்போது ஏன் திமுக அரசாங்கத்தில் உள்ள ஒருவர் கூட சென்று துக்கம் விசாரிக்க வில்லை, ஏதும் செய்யவில்லை. எதற்காக ? எங்கள் இந்திய நாட்டில்… நாங்கள் ஆளுகின்ற நாட்டில்… நாங்கள் மதச்சார்பற்ற நாடாக வைத்திருக்க வேண்டும். ஏன் இந்துக்கள் இந்திய நாட்டில் இல்லையா ? என்று மக்கள் கேட்கிறார்கள்.
திமுக அரசாங்கத்துக்கு ஏற்கனவே இங்கு பெண்கள் எல்லாம் பயங்கரமாக கொதிப்பில் இருக்கிறார்கள். ஒன்றியம் வாரியாக, மண்டலம் வழியாக பிரச்சினைகள் வெடிக்கும், உங்களால் தாங்கவே முடியாது என எச்சரித்தார்.