தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திமுக வை அரசியல் கட்சி ஆரம்பித்த நிலையில் கடமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவின் போது திமுகவை கடுமையாக விமர்சித்த அவர் பாஜகவையும் விமர்சித்தார். சமூக நீதி பேசும் திமுக அரசு மக்களுக்காக எந்த நல்ல விஷயங்களையும் கூறவில்லை எனவும் திமுக கூட்டணி 2026 ஆம் ஆண்டு உடையும் எனவும் மக்களே அவர்களை மைனஸ் ஆக்குவார்கள் என்றும் கூறினார். அதன்பிறகு இறுமாப்புடன் 200 வெல்வோம் கூறுகிறார்கள் எனவும் கூறினார். அதன் பிறகு விசிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்படும் என்றும் இனி ஒருவர் பிறப்பால் முதலமைச்சர் ஆக முடியாது என்றும் கூறினார்.

இதற்கு தற்போது திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, திமுகவை எதிர்த்தவர்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாக போய்விடுவார்கள். நான் சாபம் விடமில்லை. இது வரலாறு. வரலாறு அதைத்தான் சொல்கிறது. புது துடைப்பம் கொஞ்ச நாளைக்கு வேகமாகத்தான் பெருக்கும். போகப் போக தான் தெரியவரும். நேத்து வந்தவர் ரொம்ப அதிகமா பேசுகிறார். மன்னராட்சி என்றெல்லாம் கூறுகிறார்.  நேற்று ஒருவர் மன்னராட்சி என்று கூறும் நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் ஆட்சியில் இருக்கிறார். தேர்தலில் நின்று 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களித்து பெரும்பான்மையோடு வெற்றி பெறுபவர்கள் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் சட்டம்.

இது தெரியாத முட்டாப் பயல்கள் மன்னர் ஆட்சி என்கிறார்கள். இன்று நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் ஸ்டாலினும் மக்கள் மத்தியில் சென்று ஓட்டு கேட்டு ஜெயித்தவர்கள். திராவிடம் என்ற சொல்லை தாங்கிக் கொள்ள முடியாத ஒரு கூட்டம் அவர்களுக்கு வயித்தெரிச்சல். எங்கேயோ தொழில் தகராறு. இன்று சினிமாவில் இருக்கிற தொழில் தகறாறால் அதாவது தொழிலில் ஏற்பட்ட பிரச்சனையால்தான் அவர் சினிமாவை விட்டு விலகி அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் என்பது போல் தெரிகிறது. அந்த கட்சி எல்லாம் உருப்படுமா. நான் வெளிப்படையாகவே இதை சொல்கிறேன். அவர் கட்சிக்காகவோ மக்களுக்காகவோ அரசியலுக்கு வரவில்லை. சினிமாவில் ஏற்பட்ட தொழில் நஷ்டத்தினால் தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார் என்று கடுமையாக பேசினார். மேலும் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.