விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்ததாக தற்போது அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளார். அதாவது விஜய் கலந்து கொண்ட அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின்போது ஆதவ் அர்ஜுனா தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்படும் என்றும் பாஜகவை ஏற்கனவே ஒழித்த நிலையில் அடுத்தது திமுக தான் என்றும் விஜய் அரசியல் களத்திற்கு வர வேண்டும் எனவும் ஒருமுறை வேங்கை வயலுக்கு நேரில் செல்ல வேண்டும் என்றும் கூறினார். அதோடு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு கண்டிப்பாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் கூறினார்.
அவர் விஜய்க்கு ஆதரவாக திமுகவுக்கு எதிராக பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கூட்டணிக்கு எதிராக பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமாவளவன் கூறி இருந்த நிலையில் தற்போது அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். அதாவது கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை கலந்து கொள்ள சொன்னது நான்தான் என்று திருமாவளவன் கூறினார். அதே சமயத்தில் ஆதவ் அர்ஜூனா பேசியதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் கூறினார்.