அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுகவில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவிற்கு இந்த வாரம் சிறைக்கு செல்லும் வாரம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “செந்தில் பாலாஜி வாயை திறந்தால் திமுகவினர் 90% பேர் சிறைக்கு சென்றுவிடுவார்கள் என ஸ்டாலின் பயப்படுகிறார். அமலாக்கத்துறையால் ஏற்பட்ட பாதிப்பை திசை திருப்பவே 500 டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கடுமையாக விமர்சித்து பேசினார்.