விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறிய பழைய வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ பதிவிடப்பட்ட சிறிது நேரத்தில் நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் பகிரப்பட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் அந்த வீடியோ நீக்கப்பட்டது. அதாவது திமுக அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கீடு வேண்டும் என்பது போல் திருமாவளவன் கூறிய நிலையில் தற்போது இதற்கு விளக்கம் கொடுத்தார். அதாவது தனக்கும் அந்த வீடியோவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய திருமாவளவன் நாங்கள் ஆரம்ப காலத்தில் இருந்து கூறிய விஷயம் தான் அது என்று விளக்கம் கொடுத்திருந்தார்.‌

இந்நிலையில் திருமாவளவன் தற்போது பங்கு கேட்டதற்கு சீமான் வரவேற்பு கொடுத்துள்ளார். அதாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்ட திருமாவளவனின் கருத்தை நான் வரவேற்கிறேன். அதேசமயம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து திருமாவளவன் விலகாமல் இருக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். மேலும் திருமாவளவன் பேசியது வெறும் அரசியல் நிலைப்பாடு மட்டுமே என்ற கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு ‌ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.