தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி…. ஆய்வுகள் கூறும் வியக்கவைக்கும் நன்மைகள்….!!!

தினமும் 45 நிமிடம் நடைப் பயிற்சி செய்வதனால் உங்கள் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி தினமும் நடைப்பயிற்சி செய்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தினமும் நடைப்பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் சீராகும். கலோரிகள் எரிக்க உதவுகிறது. நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும். முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது. எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கிறது. உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு சத்தின் அளவை குறைக்கிறது. கண் பார்வையைத் தெளிவு படுத்துகிறது. இதயத்தை வலிமையாக்கும்.

மனதுக்கு மகிழ்ச்சியை தரும். நுரையீரலில் ஆக்சிஜன் கொள்ளளவு பன்மடங்கு அதிகரிக்கும். ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். நடப்பவர்களுக்கு கூடுதல் பலனாக வைட்டமின் டி கிடைக்கும். செரிமானம் சீராகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எப்போதும் இளமையாக இருக்க உதவும். எனவே தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதை மறந்து விடாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *