தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால்…. இத்தனை நோய்களையும் விரட்டியடிக்கலாம்…!!!

தினமும் காலையில் பூண்டு  சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

பூண்டானது தினமும் நம்முடைய சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருளாகும். பண்டைய மற்றும் நவீன வரலாற்றில் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சளி, இருமல் உயர் ரத்த அழுத்தம், கீல்வாதம், பல்வேறு மலச்சிக்கல் மற்றும் தொற்று போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணியாக பயன்படுகிறது. சுகாதார நலன்களுக்காக தினமும் பூண்டை  காலையில் உட்கொள்ளலாம். இப்படி உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பூண்டு பற்கள் இரண்டை எடுத்து அவற்றின் தோலை உரித்த பின்பு அதை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.

நன்மைகள்:

பூண்டு உட்கொள்வதால் துர்நாற்றம், எரிச்சல் உணர்வு ஏற்படும். ஆனால் அதோடு உங்கள் உடல் பாதுகாப்பு முறையை அதிகரிக்க உதவுகிறது.

பூண்டில் பொதுவாக கலோரிகள் குறைவாகவும், விட்டமின் சி, விட்டமின் பி6, மாங்கனீசு ஆகியவை நிறைந்துள்ளது.

பூண்டை உரித்து மென்று சாப்பிட்டால் கந்தக கலவை அதிகமாக உருவாகின்றன. இந்த கலவை உடலில் செரிமான சக்தி அதிகரிப்பதோடு உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கின்றது .

காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான் உடலின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதை உருவாக்க பூண்டை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.

உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற பூண்டு சிறந்த மருந்தாக பயன்படுகின்றது. வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.

புற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

பொதுவாக குளிர்காலத்தில் தோல் வறட்சி மற்றும் தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் இப்படியான தோல் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு சிறந்த வழி என்னவென்றால் காலையில் வெறும் வயிற்றில் பூண்டு உட்கொள்வது தான்.

தெளிவான மற்றும் மிருதுவான சருமத்தை பெற ஒவ்வொரு நாளும் காலை பூண்டு சாப்பிடலாம். பூண்டு ஒரு மூலிகை என்பதால் இது உயர் ரத்த அழுத்தத்திற்கு எதிராக போராடுகிறது.

எச்சரிக்கை:

காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் வயிற்றில் எரிச்சல் உண்டாகும். எனவே இரண்டுக்கு மேல் உண்ணக்கூடாது.

மேலும் குமட்டல், வாந்தி, மலசிக்கல் போன்ற உபாதைகள் தெரிந்தால் போன்று சாப்பிடுவதை தவிர்க்கவும்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள், ரத்த புற்றுநோய், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கக் கூடாது.