தினமும் ரூ.29 போதும்…. ரூ.3 லட்சம் சம்பாதிக்கலாம்…. பெண்களுக்கான சூப்பரான திட்டம்…!!!

எல்ஐசி நீண்ட கால முதலீட்திற்கான ஒரு சிறந்த நிறுவனம் ஆகும். இது  உங்களுடைய ஓய்வு காலத்தில் நிம்மதியாகவும், யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்வதற்கான ஏதுவாக நிறைய லாபம் தரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அதிலும் குறிப்பாக பெண்களுக்கான மிக முக்கியமான திட்டம் தான் எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம். இந்த திட்டத்தில் 5 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் பாலிசி தொடங்கலாம். சிறிய தொகையை நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்து பல லட்சங்களில் வருமானம் ஈட்டலாம்.

சுயமாக வாழ நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தில்  இத்திட்டத்தில் தினமும் 29 ரூபாய் முதலீடு செய்தாலே திட்டத்தின் நிறைவில் ரூ.3.97 லட்சம் சம்பாதிக்கலாம். இந்த பணம் சுயமாக தொழில் செய்யத் தொடங்கவோ அல்லது எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும். ஒரு வேளை பாலிசிதாரர் இறக்கும் வேளையில் அவருடைய குடும்பத்தாருக்கும் பாலிசி தொகை கிடைக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 75 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை உறுதித் தொகை கிடைக்கும்.  இந்த திட்டத்தில் இணைவதற்கு ஆதார் கட்டாயம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *