திண்டிவனம் அருகே உள்ள பள்ளி…. “போலி மதுபானங்கள் கடத்தப்பட்டு விற்பனை”…. பொதுமக்கள் அவதி…!!!!!

பள்ளி அருகிலேயே புதுச்சேரியில் இருந்து கள்ளத்தனமாக மதுபானங்கள் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப் படுகின்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இருக்கின்றது. இந்த பள்ளியின் அருகே பல வருடங்களாகவே 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் டாஸ்மார்க் கடை ஒன்று இயங்கி வருகின்ற நிலையில் கடையை அகற்றக்கோரி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பல போராட்டங்கள் நடத்தியும் கடையை அகற்றவில்லை. தற்பொழுது டாஸ்மார்க் கடை அருகிலேயே பல அனுமதி பெறாத பெட்டிக்கடைகள் உருவாகி இருக்கிறது.

இந்த பெட்டி கடைகளில் புதுச்சேரியிலிருந்து உயிரை பறிக்கும் போலி மதுபானங்கள் கடத்தப்பட்டு வந்து அதிகாலை 6 மணி முதலே அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதை மதுபிரியர்கள் வாங்கி குடித்துவிட்டு பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டோருக்கு இடையூறு செய்து வருகின்றார்கள். மேலும் மது குடித்துவிட்டு சாலையில் செல்லும் மாணவ-மாணவிகள் மீது பாட்டில்களை வீசுகின்றார்கள். இது பற்றி பல புகார்கள் அளிக்கப்பட்டும் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *