திட்டவோ அணைக்கவோ கமலுக்கு உரிமை உண்டு… குஷ்பு அதிரடி பேட்டி…!!!

என்னை திட்டவோ அணைக்கவோ கமலுக்கு முழு உரிமையும் உள்ளது என்று பாஜக எம்பி குஷ்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்கள் குறித்து குஷ்பு தெரிவித்த கருத்துக்கு அவருக்கு சட்டங்கள் பற்றி ஒன்றும் தெரியாது என கமல்ஹாசன் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த குஷ்பு, “கமல் என் நீண்ட கால நண்பர். அவர் என்னை திட்டவோ, அணைக்கவும் அவருக்கு எப்போதும் உரிமை உண்டு. அரசியலில் நிரந்தர நண்பனும், எதிரியோ கிடையாது என்ற கலைஞரின் வாழ்க்கை பின்பற்றுபவள் நான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.