மார்வெல் படங்களில் “ஹாக் ஐ” சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்த ஜெரமி ரெனர் உடல்நிலை அபாய கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை தன் வீட்டின் முன் குவிந்திருந்த பனியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.