தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழ்பவர்கள் திரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் 20 வருடங்களுக்கும் மேலாக திரையுலைகில் முன்னணி நடிகைகளாக திகழ்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆரம்ப காலத்தில் நட்பாக இருந்த போதிலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சில பிரச்சினைகளால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் குருவி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிப்பது தொடர்பாக திரிஷா மற்றும் நயன்தாரா இடையே மோதல் ஏற்பட்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து தங்களுக்குள் உண்மையில் என்ன நடந்தது என்பதை இருவரும் தெளிவுபடுத்தினர். இது குறித்து நடிகை திரிஷா கூறியதாவது, எனக்கும் நயன்தாராவுக்கும் இடையே தவறான புரிதல் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் அது தொழில் காரணங்களால் கிடையாது. தனிப்பட்ட முறையில் தான். இதனால் நாங்கள் சிறிது காலம் பேசாமல் இருந்தோம். மற்றபடி சண்டை எதுவும் போடவில்லை என்று கூறினார். இதேபோன்று நடிகை நயன்தாரா கூறியதாவது, எனக்கும் திரிஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகுமுதலில் திரிஷா என்னிடம் பேசுவதற்கு அணுகினார். மேலும் அதன் பிறகு இருவரும் பேசத் தொடங்கிவிட்டோம் என்று கூறினார்.