அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை முடக்கியதாக தற்போது அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் சென்னை மண்டல அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

அதன்படி சென்னை, தூத்துக்குடி மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 1.26 கோடி மதிப்புள்ளான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. பண மோசடி தொடர்பான குற்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.