திடீர்னு இது இப்படி ஆகிட்டு…. 20 நிமிடம் கழித்து வாக்களித்த வாக்காளர்கள்…. மதுரையில் பொதுமக்கள்அவதி….!!

 மதுரையில் வி.வி பேட் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் 20 நிமிடத்திற்குப் பிறகு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அனைத்து மக்களும் அவரவர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஆர்வமுடன் சற்றும் தாமதமில்லாமல் வாக்களித்து வந்தனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக பஞ்சாயத்து யூனியன் அரசு பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

இதனையடுத்து மக்கள் அப்பள்ளிக்கு சென்று வாக்களிக்க தொடங்கியுள்ளார்கள். ஆனால் சிறிது நேரத்தில் திடீரென்று எந்த நபருக்கு ஓட்டு போட்டோம் என்று காட்டும்படி வடிவமைக்கப்பட்ட வி.வி பேட் எந்திரம் பழுதானது. இதனால் அவ்வாக்குச்சாவடியில் வைத்து எந்திரம் சுமார் 20 நிமிடம் சரி செய்யப்பட்டது. அதன்பின் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்கினை செலுத்திவிட்டு சென்றனர்.