தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் பிரிமியர் ஷோ நிகழ்ச்சி யின் போது கூட்ட நெரிசலால் ரேவதி என்ற ரசிகை உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார். இன்று அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி விடுவித்தது. இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்வதற்காக காவல்துறையினர் அவருடைய வீட்டிற்கு சென்றபோது அவருடைய தந்தையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதாக கூறினார்.
ஆனால் அவரை அழைத்து செல்ல காவல்துறையினர் மறுத்துவிட்டனர். அதற்கு முன்பு அவருடைய மனைவி அழுது கொண்டிருந்தார். அவருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆறுதல் கூறினார். அவருடைய மனைவி அழுது கொண்டே இருந்த நிலையில் ஆறுதல் கூறிய அல்லு அர்ஜுன் அவருடைய கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு பின்னர் போலீஸ்காரர்களுடன் காரில் கிளம்பி சென்றார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.