உலகநாயகன் கமல்ஹாசனின் வாரிசு சுருதிஹாசன். இவர் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவர் நடிப்பில் அண்மையில் தெலுங்கில் வால்டர் வீரய்யா மற்றும் வீரசிம்கா ரெட்டி போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்து நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக சலார் என்ற திரைப்படத்தில் சுருதிஹாசன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வீரசிம்ஹா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்க கோபி சந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் கோபிசந்த் மேடையில் நடிகை ஸ்ருதிஹாசனிடம் ஐ லவ் யூ என்று கூறியுள்ளார். அப்போது ஸ்ருதிஹாசன் எனக்கு கோபி சந்த் எனக்கு அண்ணன் போன்றவர் என்று கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.