திடீரென மெலிந்து போன அஜித்! என்ன ஆச்சு அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்காக நடிகர் அஜித்  105 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே உடல் எடை கூடியிருந்த நடிகர் அஜித் விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை குறைத்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் அஜித் தனது ரசிகருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் உடல் எடை குறைத்தது போல் தோற்றமளிக்கிறார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.