திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. உயிரிழந்த 11 பேர்…. நிதியுதவி அறிவித்த பிரதமர்….!!!!!

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி  அறிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில்  உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பகுதி நோக்கி இன்று காலையில் பேருந்து ஒன்று  பயணிகளை  ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர்   காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிதி உதவி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த இந்த விபத்து வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களை எண்ணி வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு நான் ஆறுதல் கூறுகிறேன். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2  லட்ச ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம்  ரூபாய் வழங்கப்படும் என அவர்  தெரிவித்துள்ளார்.